6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..ஏப்ரல்11,12,13உடல் நிலையில் வாய் வயிறு,முதுகு வலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். புதிய ஆடை அணிகலன் வாங்குவதைத் தள்ளிப் போடவும். பிள்ளைகளால் எதிர் பார்க்காத சில தொல்லைகளும் மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம்.ஒரு சிலருக்குச் சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் வந்து சேரும்.செய் தொழில் சம்பந்தமாகப் புதிய கூட்டு முயற்சிகளைச் சிறிது தள்ளிப் போடுதல் உகந்ததாகும்.ஏப்ரல்14,15மற்றவர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.ஆலயப் பணி செய்பவர்கள்,அறநிலையத்துறை சார்ந்தவர்கள் நன்மை அடைவார்கள்..புதிய வீடு மாற்றங்களைச் செய்ய முயற்சிப்பீர்கள். அரசியல் வாதிகளால் எதிர் பார்த்து இருந்த ஆதாயங்கள் கிடைப்பதில் இன்னும் சற்கால தாமதம் ஆகலாம். குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வருவது நல்லது. யாத்திரையில் சம்பந்தம் இல்லாத புதிய நபர்கள் மூலமாக சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது.ஏப்ரல்16,17 மின்சாரம் அடுப்பு ஆகியவற்றில் எச்சரிக்கையுடன் கையாளுதல் நல்லது.துலை தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லதாகும். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப வீடு வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். உற்றார் மற்றும் உறவினர்களின் திடீர் வரவுகளால் எதிர் பாராத பொருட் செவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் ஒரு சில ஆதாயங்கள் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.
இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து மஞ்சள் ஆடை செய்து வுரவும்.